உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நடுத்தர மக்களும் வருவாங்களே!

 நடுத்தர மக்களும் வருவாங்களே!

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, கோவையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி துவக்கியுள்ளது. முதல் கட்டமாக, தரமான உணவு தயாரிக்க, அம்மா உணவக பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையால் சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் கார்த்தி பேசும்போது, 'நம் நாட்டில், 516 வகை காய்கறிகள் விளைகின்றன. ஆனால், தமிழக மார்க்கெட்டுக்கு, 90 வகை காய்கறிகளே வருகின்றன. அதிலும் வெங்காயம், தக்காளி, கத்தரி, உருளைக்கிழங்கு என, ஏழு காய்கறிகளையே திரும்ப திரும்ப பயன்படுத்துகிறோம். 'காய்கறிகளை அரைத்து மாவில் கலந்து, கலர் கலராக தோசை சுட்டு கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்; சத்தான உணவாகவும் இருக்கும்' என்றார். இதை கேட்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர், 'அம்மா உணவகத்திலும் இந்த மாதிரி உணவு வகைகளை அறிமுகப்படுத்தினா, ஏழைகள் மட்டுமல்லாம நடுத்தர மக்களும் வந்து சாப்பிடுவாங்களே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தோர் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 29, 2026 07:16

முன்பு அம்மாஉணவகம் அறிமுகப்படுத்திய பின் it ஊழியர்கள் கூட உணவு சாப்பிட்டார்கள். இதற்கு கூட ID கேட்டு வருவாய்க்கு வரையறை செய்ய வேண்டுமா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை