உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அடிப்படை வசதிகள் கூட இல்லை...!

 அடிப்படை வசதிகள் கூட இல்லை...!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மாணவ - மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். பின் அவர் அளித்த பேட்டியில், 'ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய சிறந்த கல்வியை கொடுப்பது தமிழகம் தான். தமிழக மாணவர்களுக்கு நல்லது செய்யவே அவதாரம் எடுத்தவர், நம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ். இத்துறைக்கு அவர் பல நன்மைகளை செய்துள்ளார்...' என்றார். இதை கேட்ட மாணவர் ஒருவர், 'பல பள்ளிகள்ல அடிப்படை வசதிகளே இல்லை... இவர் பேசுறதை பார்ரா...' என, முணுமுணுக்க, சக மாணவர்கள் சிரித்தபடியே நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 29, 2025 22:42

மைக் கிடைத்தவுடன் உண்மைக்கு புறம்பானதை பேசக்கூடாது. பல பள்ளி கட்டிடங்கள் அடிக்கடி இடிந்து விழுகின்றன. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை... இதில் முதல்வர் துதி என்ன வேண்டிக்கிடக்கிறது.


D.Ambujavalli
டிச 29, 2025 15:11

எந்த மாணவனாவது துணிந்து ‘இந்த சிறந்த கல்வி அமைச்சரின் ஆட்சியில்தான் பள்ளி சுற்றுச்சுவர் விழுந்து மாணவன் இறந்தானா? ‘ என்று கேட்டுவிட்டால் அவன் கதி என்ன ஆகும்?


புதிய வீடியோ