உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  மேலிடத்தில் இதை பேசணும்!

 மேலிடத்தில் இதை பேசணும்!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் சமீபத்தில் நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில துணை தலைவர், கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். பின் அவர் அளித்த பேட்டியில், 'காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக காங்கிரஸ் அரசு நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காது என்று, ஏற்கனவே பார்லிமென்டில் தெளிவாக தெரிவித்துள்ளது. அதையும் மீறி, கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ., எதிர்க்கும். 'மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக பா.ஜ., உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், அதில் பா.ஜ., தன் கருத்துகளை பதிவு செய்யும்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இதே கருத்தை பா.ஜ., டில்லி மேலிட தலைவர்களிடம் இவர் பேசி, கர்நாடகாவின் முயற்சிக்கு தடை போடணும்' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை