உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஓட்டு போட மாட்டோம்!

 ஓட்டு போட மாட்டோம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில், தி.மு.க., சார்பில் சாதனை விளக்க கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு பேச்சாளராக, திருச்சி சிவா எம்.பி., பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை, 5:00 மணிக்கு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, பிற்பகல், 3:00 மணி முதலே ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டு, அமர வைக்கப்பட்டனர்; ஆனால், இரவு 8:00 மணிக்கு மேல் தான் திருச்சி சிவா வந்தார். அவர், தி.மு.க.,வின் சாதனைகள் மற்றும் பெண்களுக்கு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பேச துவங்கியதும், பெண்கள் வரிசை மொத்தமும் காலியானது. சேர்கள் காலியாவதை பார்த்த தி.மு.க.,வினர், மண்டபத்தின் கேட்டை பூட்டி, அவர்களை வெளியே அனுப்ப மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு பெண், 'இப்ப கேட்டை திறக்கலைன்னா, நாங்க யாரும் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம்...' எனக் கூற, மிரண்டு போன தி.மு.க.,வினர் கேட்டை திறந்து, அவர்களை வெளியில் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 22, 2026 06:26

விஜய்தான் சொன்ன நேரம் வரமாட்டார் என்று label போற்றும் இவர்கள் மட்டும் இப்படிப் பெண்களை அடைத்து வைத்து, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் 3 மணி நேரம் தாமதமாக வரலாம் எல்லாம் மாமியார் ……மண்குடம் கதைதான்


முக்கிய வீடியோ