நுாதனமா நுழைஞ்சிட்டாங்களே!
சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கு, மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் நடந்தது. பிரதான கட்சிகளான, அ.தி.மு.க.,வினர், தி.மு.க., கூட்டணியான, மா.கம்யூ.,வினர் மற்றும் த.வெ.க., வேட்பாளர்கள் ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர். அலுவலகத்தின், 200 மீட்டருக்கு முன்பே, போலீசார் இரும்பு தடுப்பு போட்டிருந்தனர். வேட்பாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அருகில் அமைந்துள்ள கடைகளுக்கும், யாரும் செல்ல முடியவில்லை. இந்நிலையில், மா.கம்யூ., வேட்பாளர் சுந்தரராஜன், மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த இரு பெண் நிர்வாகிகள், முன்னதாகவே வேட்பு மனு தாக்கல் அலுவலகம் அருகே வந்தனர். இரும்பு தடுப்பு ஏற்படுத்தியிருந்த போலீசாரிடம், 'கடைக்கு போகிறோம்' என அனுமதி கேட்டு, அலுவலகத்தை ஒட்டி இருந்த கடைக்குள் நின்று கொண் டனர். பின், வேட்பாளர் வரவும், அவருடன் மனு தாக்கல் செய்ய, உள்ளே சென்று விட்டனர். இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், 'நுாதனமா நுழைஞ்சிட்டாங்களே...' என, புலம்ப, சக போலீசார் சிரித்தனர்.