உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எங்களை மிதக்க விட்டுட்டாங்க!

எங்களை மிதக்க விட்டுட்டாங்க!

கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து, விநாடிக்கு, 9,500 கன அடி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. இதில், கடைமடை பகுதியான, சடையங்குப்பம் கிராமத்தை ஒட்டிய கொசஸ்தலை ஆற்றின் கரை பலவீனமாக இருந்ததால், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ள பாதிப்பு குறித்து, செய்தி சேகரிக்க சென்ற இளம் நிருபர் ஒருவர், 'கொசஸ்தலை கரைகள், 15 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டது எப்படி' என, அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு ஊர் பெரியவர் ஒருவர், 'முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட மணலிபுதுநகர் பக்கம் மட்டுமே கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சடையங்குப்பத்தில் பல இடங்களில் கரையே கிடையாது. முதல்வர் இங்க எல்லாம் வந்து பார்க்கவா போறார்னு அதிகாரிகள் அலட்சியமா இருந்து, எங்களை மிதக்க விட்டுட்டாங்க...' என அங்கலாய்க்க, அருகில் இருந்தவர்கள் விரக்தியுடன் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
நவ 02, 2025 19:35

முதல்வர் ‘ஆய்வு’ செய்ய ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து வேலையை முடித்து விட்டதாகக் கணக்கு காட்டி ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதியை ‘ஏப்பம்’ விடுவது ஒன்றும் புதிதில்லையே மேலிடம் அள்ளுவதில் அரைக்கால் பங்குகூட. இல்லை என்று பதில் வரும்


Anantharaman Srinivasan
நவ 02, 2025 19:26

எல்லாமே திராவிடமாடல் ஆட்சியில் அரைகுறை வேலைகள் தான். உதயநிதி,, . ஸ்டாலின் போய் வரும் ரோடுகள் மட்டும் சரியாயிருக்கும். மற்றவை போடப்படாமலே கணக்கெழுதி சுருட்டப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை