உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கண்டுக்க மாட்டேங்கிறாரே!

கண்டுக்க மாட்டேங்கிறாரே!

பெரம்பலுாரில் உள்ள தனியார் பள்ளியின் வைர விழாவில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்றார்.அப்போது பேசுகையில், 'தமிழகத்தின் பின்தங்கியபகுதியாக இருந்த பெரம்பலுார் பகுதியில், இப்பள்ளி ஏராளமான பெண்களுக்கு கல்வி வழங்கி, அவர்கள் முன்னேற்றத்தில் ஏணியாக இருந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புஉணர்வுடன், சுயநலம் பாராமல், ஒவ்வொரு மாணவியரையும் தன் சொந்த குழந்தைகளாக பாவித்து வருகின்றனர்.'பெற்றோருக்கு அடுத்து, நாம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவது ஆசிரியர்கள் தான். உங்களுக்கெல்லாம் ஏணியாக இருந்து, உங்களை உயர்த்திய ஆசிரியர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும்' என்றார்.இதைக் கேட்ட ஆசிரியர் ஒருவர், 'அமைச்சர் நம்மை நல்லா புகழுறாரு... ஆனா, நம்ம கோரிக்கைகளைகண்டுக்க மாட்டேங்கிறாரே...' என முணுமுணுக்க, ஆசிரியர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை