வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாலகிருஷ்ணன் படித்துவிட்டு அரசியலுக்கு வழலாமே! அவரது அரை வேக்காட்டுத்தனத்தை வெளிக்காட்டுவதை அப்போதாவது நிறுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன்
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: 'அம்பேத்கர் பெயரைக் கேட்டால் எரிச்சல்வருகிறது என்றால், பல நுாறுமுறை அவரது பெயரை சொல்வோம்' என, உதயநிதி கூறியுள்ளார். 'பட்டியல் சமுதாயத்தினர் நீதிபதி ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்ற ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதியை பார்த்து, 'நீ எஸ்.சி.,தானே' என அமைச்சர்பொன்முடி கேட்டதற்கும், அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை சொல்லி மன்னிப்பு கேளுங்கள். உங்களை மாதிரி சாதாரண மக்கள் யாரும் கேள்வி கேட்றக்கூடாதுன்னு தானே அம்பேத்கரை வச்சு அரசியல் பண்றாங்க! மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், நாடு குட்டிச்சுவராகி விடும்; மாநில உரிமைகள் பறிபோய் விடும். அப்ப, இவர் சொல்ற பிரச்னைகளை எல்லாம் தீர்த்துட்டா, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏத்துக்குவாரா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'ஒரு கிறிஸ்துவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என, துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை மசூதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களிலும் முடிவெடுப்பது போல், சிவாலயங்கள், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில், கிழமை ஒன்றை தீர்மானித்து, ஹிந்துக்களும் முடிவெடுக்கத் துவங்கி விட்டால், 'நான் ஹிந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' என்ற வாசகங்களை, அரசியல் தலைவர்கள் பேச கேட்கலாமே!திராவிட மாடல் அரசியல்வாதிகள் தான், ஹிந்துக்களுக்கு அப்படி ஒரு எண்ணமே வராத மாதிரி பார்த்துக்கிறாங்களே!தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கொலைக் குற்றவாளியை கட்டிப் பிடிக்கும் முதல்வர், தமிழர்களைக் கொன்ற பயங்கரவாதிக்கு ஊர்வலம் நடத்த அனுமதிக்கும் சட்டம் - ஒழுங்கு, பயங்கரவாதிக்கு இரங்கற்பா வாசிக்கும் கட்சிகள் என, நாலாபுறமும் மறைமுக பிரிவினைவாதம், தமிழகத்தை சூழ்ந்துள்ளது. அந்த காரிருளை கிழிக்கும் மின்னலாக, தேசியத்தை போற்றிப் பாதுகாக்கும் ஒரே இயக்கமாக பா.ஜ., மட்டுமே இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான், கோவையில் நடந்த கருப்பு தின பேரணி.அதுக்காக தானே, 900 பேர் மீது எப்.ஐ.ஆர்., போட்டிருக்காங்க!
பாலகிருஷ்ணன் படித்துவிட்டு அரசியலுக்கு வழலாமே! அவரது அரை வேக்காட்டுத்தனத்தை வெளிக்காட்டுவதை அப்போதாவது நிறுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன்