உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு: அனைத்து தரப்பினரும் முன்னேற வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் காலுான்ற முடியாதவர்கள் நம்மிடம் பிரிவினையை உண்டு பண்ண முயற்சி செய்கின்றனர். தமிழகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து, 2026ல் மீண்டும் தி.மு.க., ஆட்சி வர உழைக்க வேண்டும்.தமிழகம் இப்ப, இவங்க கட்சி தலைமையிலான அரசிடம் தானே இருக்கு... அப்புறமும் அதை எதற்கு மீட்டெடுக்கணும்? மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் என்ன கொள்கை இருக்கிறது. வக்ப் சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்துவிட்டு, அதை ஆதரிக்கும் பா.ஜ.,வோடு அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. மும்மொழி கொள்கையிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. அ.தி.மு.க., என்பதற்கு பதிலாக பா.ஜ.,வின் அடிமை தி.மு.க., என்று சொல்ல வேண்டும்.இவங்க கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையில் இருப்பது தான் கொள்கை கூட்டணின்னு சொல்றாரா... அப்படி பார்த்தால், வேங்கைவயல், வடகாடு கலவரத்தில் இவங்க கட்சியின் கருத்தை தி.மு.க., ஏத்துக்குமா?தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். பிரதமர் மோடி, ஒரு தனி நபர் அல்ல; 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையாகத் திகழ்கிறார். பாகிஸ்தானில் ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியினர், 'வெற்றிவேல் வீரவேல்' ஆப்பரேஷனை துவங்க உள்ளனர். 'சிந்துார் ஆப்பரேஷன்' வெற்றி, வெற்றிவேல், வீரவேல் ஆப்பரேஷனுக்கும் துணை நிற்கும்னு நம்புறாரோ?வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி புதிய கூட்டணி அல்ல. ஏற்கனவே, 2021 தேர்தலில் பரிசோதித்து, தோல்வியடைந்த கூட்டணி தான். பா.ஜ., கூட்டணியின் தோல்வி குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறது; ஆனால், இதனால் பாதிப்பு தான் அதிகம் ஏற்படும்.ஆனா, 2021 தேர்தலுக்கு பிறகு நடந்த 2024 லோக்சபா தேர்தலில், தமிழக பா.ஜ., 18 சதவீதம் ஓட்டுகள் வாங்கியதை இவர் மறந்துட்டாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மே 10, 2025 10:44

வெங்காயக் கூட்டணி உறுப்பினர், ஏழாம வகுப்பே தாண்டாத கம்யூக்கள் எப்படி வக்ஃப் சட்டம் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்?


சமீபத்திய செய்தி