உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: சிறப்பு தீவிர திருத்த முறையில், இறுதி செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில், 85.10 சதவீதம் பேர், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்து உள்ளனர். அதேசமயம் வகுப்புவாத மதவெறி சக்திகளையும், இனவாத, ஜாதிய சக்திகளையும் மக்கள் நிராகரித்து உள்ளனர். தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பை, இந்திய கம்யூனிஸ் ட் கட்சி மதித்து ஏற்கிறது. 'எனக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு ரெண்டு கண் போனதுல ரொம்ப சந்தோஷமா இருக்குது'ன்னு சொல்லாம சொல்றாரோ?அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் பேச்சு: தமிழக காங்கிரஸ் சீர்குலைந்து, கோமா நிலைக்கு வந்து விட் டது. இதை மாற்ற வேண் டும் என்றால், 2029ல் நடக்க வுள்ள லோக்சபா தேர்தலில், பிரதமராக ராகுல் வர வேண் டும். அதற்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் களை எடுக்க வேண்டும். நிர்வாகி கள் எல்லாரையும் கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும். அதை, தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும். 'தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை மாத்த ணும்'னு சிம்பிளா சொல்லிட்டு போயிருக்கலாமே! மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேட்டி: நாடு முழுதும் மத அரசியல் செய்யும் பா.ஜ., தமிழகத்தில் அ.தி.மு.க.,வை பயன் படுத்தி, ஆட்சியை கைப் பற்றி விடக் கூடாது என்ற அரசியல் உறுதிப் பாட்டுடன் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். தமிழக வாக்காளர்கள் பா.ஜ.,வை நிராகரித்து உள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. அது சரி... தமிழக வாக்காளர்கள், நீங்க அங்கம் வகித்த தி.மு.க., கூட்டணியையும் தான் நிராகரிச்சிருக்காங்க! தமிழக காங்., கலை துறையின், முன்னாள் துணை தலைவர் மயிலை அசோக்குமார் அ றிக்கை: மது போதைக்கு மக்கள் அடிமையாகி விட்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். இதனால், தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகமாகி விட்டன. பெண்கள் தனியாக நடமாட முடியவில்லை. பாலியல் பலாத்காரங்கள் தடுக்கப்பட வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசு, பூரண ம துவிலக்கை கொண்டு வர வேண்டும். மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். விஜய் மட்டும், 'டாஸ்மாக்' மது கடைகளை இழுத்து மூடினால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் பெண்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளும் அவருக்குதான் விழும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மே 07, 2026 06:15

தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்விடாமல் அவர்கள் கைகளில் உண்டியல்களைக் கொடுக்கும் இவர்களது குழப்பவாதமோ வகுப்புவீதம் என்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை