உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் சமீபத்தில் இணைந்துள்ள டாக்டர் சரவணன் பேட்டி:

முதல்வர் விஜய் பிறந்த நாளை ஒட்டி, மதுரையில் இந்த வாரம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்க இருக்கிறோம். தமிழகத்தில் புதிய புரட்சியை முதல்வர் விஜய் உருவாக்கி இருக்கிறார். ஜாதி, மதம், பணம் கடந்த புதிய அரசியலை கொண்டு வந்திருப்பதுடன், ஊழலை ஒழித்து ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளுக்கு, விஜயை தமிழக மக்கள் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவர். ஏற்கனவே, தமிழகத்தின் இரண்டாவது எம்.ஜி.ஆராக விஜய் உருவெடுத்துடுவாரோ என்ற கலக்கத்தில் இருக்கும் திராவிட கட்சியினரி ன் துாக்கத்தை கெடுக்க பார்க்கிறாரே!

அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாநில செயலர் டாக்டர் பரமசிவம் பேட்டி:

தமிழக வெற்றி கழகத்தின் சில நிர்வாகிகள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்களுக்குள் சென்று கட்சி சார்ந்த கொண்டாட்டங்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன. கல்வி நிலையங்கள் என்பது மாணவர்களின் அறிவை வளர்க்கும் ஆலயங்கள். அங்கு, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது, கல்வி சூழலை சீர்குலைக்கும். கல்வி நிலையங்களில் கட்சி நிகழ்ச்சி நடத்தியவங்களை, த.வெ.க., தலைமை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதால், இனி இதுபோன்ற செயல்கள் தொடராதுன்னு நம்பலாம்!

தமிழக காங்., சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரீப் அறிக்கை:

முதல்வர் விஜய்க்கு காங்கிரசார் பிறந்த நாள் வாழ்த்து சொல்லட்டும்; தவறில்லை. ஆனால், 'வாழும் காம ராஜர்' என வாழ்த்து சொல்வதும், போஸ்டர் ஒட்டுவதும் தவறு. ராகுல் பிறந்த நாளுக்கு எந்த ஊரிலும் ஒரு த.வெ.க., நிர்வாகி கூட போஸ்டர் அடிக்கவில்லை. காங்கிரசாரும் தனித்துவத்தோடு இருந்தால் தான் நமக்கு மரியாதை.

ஊழலை ஒழிக்க விஜய் நடவடிக்கை எடுத்து வருவதால், வாழும் காமராஜர்னு போஸ்டர் அடிச்சுட்டாங்களோ?

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: சட்டசபை தேர்தலில் தோராயமாக, 30 கோடி ரூபாய் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன ஒருவர், அவருக்கு ஓட்டு போட்ட மக்களை எல்லா ம் ஒரு பொருட்டாக கருதாமல், அந்த பதவியை, 30 நாட்களுக்குள்ளேயே ராஜினாமா செய்துவிட்டு, ஆளும்கட்சியில் அடைக்கலமாகிறார் என்றால், அவருக்கு ஆதாயமாக எவ்வளவு கிடைத்திருக்கும்? - இவரது கட்சியில் ஜெயித்திருக்கும் 59 எம்.எல்.ஏ.,க்களும், தலா 30 கோடி ரூபாய் செலவழிச்சு தான் எம்.எல்.ஏ., ஆகியிருக்காங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை