உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிக்கை: எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால், அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது, அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டும் மற்றும்- விமர்சிக்கும் மாபெரும் ஜனநாயக கடமை, எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. இது புரியாமல், பேசினாலே கைது என்ற இந்த அரசின் அராஜகத்தை கண்டு, ஒருபோதும் அஞ்ச மாட்டோம். அது சரி... 'முதல்வரின் எலும்பை முறிப்பேன்'னு பேசுறது, உங்க அகராதியில் ஆக்கப்பூர்வமான விமர்சனமா என்ற கேள்வி எழுதே!புதிய தமிழகம் கட்சி நிறுவனர், கிருஷ்ணசாமி பேட்டி: பட்டியலின மக்களின் நலன் சார்ந்த அரசுத் துறைக்கு, 'சமூக நீதித்துறை' என பெயர் மாற்றம் செய்திருப்பது சரியே. இதில் தேவையில்லாமல், திருமாவளவன் போன்றவர்கள், 'ஆதிதிராவிடர் நலத்துறை' என பெயர் மாற்ற வலியுறுத்துவது, அர்த்தமற்றது, ஆபத்தானது; குறுகிய சிந்தனையுடையது. எனவே, திருமாவளவன் போன்றோரின் அர்த்தமற்ற அக்கோரிக்கையை, தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். வாஸ்தவம் தான்... ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிகள் என்ற பெயரை, சமூக நீதி விடுதி என தி.மு.க., அரசு மாற்றியதை மட்டும் திருமாவளவன் எதிர்க் காமல் இருந்தது ஏன்? பா.ஜ., தமிழக செயலர், வினோஜ் செல்வம் அறிக்கை : உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு, 40 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை, 3 டி.எம்.சி., தண்ணீரையே திறந்து விட்டுள்ளது. முதல்வர் விஜய், ஜனநாயகன் திரைப்படம் கர்நாடகாவில் வெளிவர வேண்டும்; வசூலில் எந்தவித சிக்கலும் இருக்கக்கூடாது என பொறுமையாக இருக்கிறாரா? முதல்வர் விஜய் நினைத்தால், ஒரு தொலைபேசி அழைப்பில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் எடுத்து சொல்லி, சுமுக தீர்வு காண முடியும். ஏன், நீங்க மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் பேசி, தண்ணீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவு போடச் சொல்லலாமே! காங்., தமிழக முன்னாள் பொதுச்செயலர், எஸ்.டி. நெடுஞ்செழியன் பேச்சு: பிரதமர் இல்லத்தை நோக்கி ராகுல், கார்கே நடத்திய பேரணி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தையும், உத்வே கத்தையும் காங்கிரசாரிடம் ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தணும் என்ற உத்வேகம் கூட, இவங்களுக்கு டில்லி மேலிடம் மூலமா தான் வருமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை