புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
நெல்லித்தோப்பு அண்ணா நகர் 3வது, குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சாமிநாதன்,நெல்லித்தோப்பு.முத்தியால்பேட்டை, சுந்தரவிநாயகர் பேட்டை 2வது, குறுக்கு தெருவில் நாய்கள் அதிகமாக இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ஆனந்தன், முத்தியால்பேட்டை. சுகாதார சீர்கேடு
காமராஜர் நகர் தொகுதி, ஞானபிரகாசம் நகர், 6வது குறுக்கு தெருவில், குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாபு, புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை
கதிர்காமம் ராகவேந்திரா நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சுரேஷ்குமார், கதிர்காமம். கோவில் குளம் துார்வாரப்படுமா?
நெட்டப்பாக்கம், பண்டசோழ நல்லுார் சிவன் கோவில் அருகே குளத்தில் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் அதிகமாக இருக்கிறது. ஐயப்பன், நெட்டப்பாக்கம்.