உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

இருண்டு கிடக்கும் காமராஜர் சாலை

தட்டாஞ்சாவடி காமராசர் சாலையில் பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்கு ஒளிர வில்லை. இப்போது சாலை விளக்குகளும் எரியாததால், சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. க.தமிழமல்லன், தட்டாஞ்சாவடி

நாய்கள் தொல்லை

லாஸ்பேட்டை தாகூர் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.தென்றல், லாஸ்பேட்டை

குண்டும், குழியுமாக சாலை

ரயில் நிலையம், சுப்பையா சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மணி, புதுச்சேரி.கொக்குபார்க் சிக்னலில் இருந்து-புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.கோவர்தினி, லாஸ்பேட்டை.

சாலையில் சிதறி கிடக்கும் குப்பை

தவளக்குப்பம் மருத்துவமனை வீதியில், குப்பைகள் சாலையில், சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாலா, தவளக்குப்பம்.

கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கரியமாணிக்கத்தில் இருந்து கல்மண்டபம் வரும் ஊரல் வாய்க்கால் சாலையோரம் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பிரபாகரன், கரியமாணிக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ