உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குடிமகன்களால் அச்சம்

தட்டாஞ்சாடி, தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் ஆர்ச் அருகே சாலையிலேயே குடிமகன்கள் மது குடிப்பதால், பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.பரணி, தட்டாஞ்சாவடி.

சாலையில் கழிவுநீர் தேக்கம்

காமராஜர் நகர் தொகுதி ஞானபிரகாசம் நகர் பகுதியில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.கவிதா, ஞானபிரகாசம் நகர்.

மினி பஸ் தேவை

வில்லியனுார் கிராம பகுதிகளுக்கு மினி பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரஜினி முருகன், வில்லியனுார்.

சாலை ஆக்கிரமிப்பு

உருளையன்பேட்டை, செயின்ட் தெரேசா தெருவில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.வள்ளி, உருளையன்பேட்டை.

பள்ளம் தோண்டும் பணி மந்தம்

காமராஜர் சாலையில், பைப் புதைக்க தோண்டப்படும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.ரவிச்சந்திரன், காமராஜர் சாலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை