புகார் பெட்டி புதுச்சேரி
மரக்கிளையில் உரசும் மின் கம்பி
மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேல்முருகன், மேட்டுப்பாளையம். சாலை படுமோசம்
சாரம் பாலாஜி நகர் பள்ளி வாசல் தெருவில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆன்ந்தே, சாரம். வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
அண்ணா சாலையில் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முருகன், அண்ணா சாலை. நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதி
அரியாங்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர். பாஸ்கர், அரியாங்குப்பம்.