உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி /  புகார் பெட்டி 

 புகார் பெட்டி 

மின் விளக்கு சீரமைக்கப்படுமா? பாக்கமுடையான்பேட் உடையார் வீதியில் உள்ள இரு மின்விளக்குகள் எரியாததால் இரவில் இந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர். மின்விளக்கு களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசியாகுமார், புதுச்சேரி. புதுச்சேரி ரெயின்போ நகர், 7வது குறுக்கு சந்து விரிவாக்கம் வீதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இந்த வீதியில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். தனலட்சுமி, புதுச்சேரி. செட்டிப்பட்டு, புதுநகர், பிள்ளையார் கோவில் தெருவில் விளக்குகள் எரியாததால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பிரகாஷ், செட்டிப்பட்டு. நாய்கள் தொல்லையால் மக்கள் பீதி மேட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இரவில் அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். சந்தோஷ், மேட்டுப்பாளையம். குப்பைகளால் சுகாதார சீர்கேடு திருக்கனுார் அருகே புதுக்குப்பம் 4 முனை சாலை சந்திப்பில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கண்ணன், திருக்கனுார். வாகன ஓட்டிகள் அவதி பத்துக்கண்ணு- பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் நடுவே உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரவணன், பிள்ளையார்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !