உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  திருநங்கையாக வெற்றி பெறுவது சுலபமல்ல!

 திருநங்கையாக வெற்றி பெறுவது சுலபமல்ல!

சென்னையில் வசித்து வரு ம், திருநங்கை பிரவீனா மாயா: ஆண்கள் மற்றும் பெண்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று, இந்த சமூகம் நிறைய வரைமுறைகளை கட்டமைத்து உள்ளது. ஆனால், திருநங்கையராக நாங்கள் வாழ அடி, உதை, சமூகத்தின் வெறுப்பு, பெற்றோரின் எதிர்ப்பு, கேலி, கிண்டல், விமர்சனம் எல்லாவற்றையும் கடந்து தான் வர வேண்டியுள்ளது. பள்ளியில் ஏவுகணை அறிவியல் குறித்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், பாலினம் குறித்த பாடங்கள் சரியாக சொல்லி தரப்படுவதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன் திருநங்கையாக மாறியோர் எதிர்கொண்ட அதே சிக்கலை தான், இந்த தலைமுறையினரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம். டீன் ஏஜ் பருவத்தில் எனக்குள் மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தன. என் நடை, பேச்சு, உடல் மொழிகளை நண்பர்கள் கிண்டல் செய்தனர். கல்லுாரி வரை ஆணாகவே வாழ்ந்தேன். பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் படிக்கும் போது கல்லுாரி பயிற்சிக்காக சென்னை வந்தேன். அ ப்போது, திருநங்கையர் உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது; உடல் உணர்வுகள் குறித்து புரிய ஆரம்பித்தது. அதன்பின், நான் என்னை திருநங்கையாக அடையாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். பெற்றோர் என்னைத் தேடி சென்னை வந்தனர். பெண் தோற்றத்தில் பார்த்ததும் முதலில் அழுதனர்; ஊருக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டினர்; கவுன்சிலிங் கொடுத்தனர். எதுவும் என்னை மாற்றவில்லை. அவர்களுக்கு பிடித்த மாதிரி மாறா மல், எனக்கு பிடித்த மாதிரியும் வாழ முடியாமல், தினமும் நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில், 'எங்கள் கண்முன் நிற்காதே...' என்று, என் பெற்றோர் சொல்லி விட்டனர். உடனே கிளம்பி, சென்னை வந்து விட்டேன். சென்னை வந்த புதிதில், திருநங்கை அம்மா நமீதா மாரிமுத்து தான் எனக்கு ஆதரவளித்தார். நான் விளம்பர கலைஞராக பணிபுரிய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மற்றவர்களின் விமர்சனங்களால் கூனி குறுகி நின்றேன். ஆனால், என்னை போன்ற திருநங்கை யர் கொடுத்த நம்பிக்கையில், 'மிஸ் கூவாகம், மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் சென்னை' என, தொடர்ந்து பல பட்டங்களை ஜெயித்தேன். அதை தொடர்ந்து, பல குறும்படங்களில், சிறு கதா பாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதிக போராட்டங்களுக்கு பின், என் குடும்பத்தில் என்னை ஏற்றுக் கொண்டனர். நான் திருநங்கையாக இருப்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. நாங்களும் கடவுளின் படைப்பு தான். எந்த பாகுபாடும் இல்லாமல், மனிதர்களை மனிதர்களாக மதியுங்களேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ