/   புகார் பெட்டி    /  செங்கல்பட்டு  /   செங்கல்பட்டு : புகார் பெட்டி; கடும் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்                      
செங்கல்பட்டு : புகார் பெட்டி; கடும் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்
கடும் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்
செய்யூர் அடுத்த வெடால் காலனி மயானம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம், கடந்த ஐந்து ஆண்டுகளாக பழுதடைந்து, கான்கிரீட் கலவை உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மிகவும் அபாயகரமான நிலையிலுள்ள இந்த மின்கம்பம், பலத்த காற்று வீசினால் முறிந்து, சாலையில் சாய்ந்து விழும். மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரும் விபத்து ஏற்படும் முன், கடுமையாக சேதமடைந்துள்ள இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - க.குமரவேல், செய்யூர்.