உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி; கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி

கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் அவதி அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 1வது வார்டுக்கு உட்பட்ட, ஒற்றை வாடை தெருவில் உள்ள சாலையை, புதிதாக அமைப்பதற்காக, பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது.பின், ஜல்லி கற்கள் கொட்டிய நிலையில், சாலை பணி முடிவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சாலையில், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. மகேஷ்குமார், மதுராந்தகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி