புகார் பெட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, புக்கத்துறை ஊராட்சி உள்ளது.இங்கு கோடி தண்டலம், நடராஜபுரம், சமத்துவபுரம், புக்கத்துறை, தபால் மேடு உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அதில், கோடி தண்டலம் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றி, குழாய்கள் வாயிலாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது, கோடி தண்டலம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன.எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, அதை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.