புகார் பெட்டி சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சீர்கேடுதிருப்போரூர் பேரூராட்சி சான்றோர் தெரு, சந்து தெரு இணைப்பு சாலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெரு வழியாக மற்ற பகுதிகளுக்கு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.இத்தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீர் தேக்கம் அதிகரித்து, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, அப்பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது. சாலையில் நடந்து செல்வோரும் அவதிப்படுகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-என்.ஷரன், திருப்போரூர்.