புகார் பெட்டி வண்ணம் பூசாத வேகத்தடையால் அபாயம்
கா ட்டாங்கொளத்துார் -- காவனுார் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வேகத்தடைகளுக்கு வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.சீனிவாசன், காட்டாங்கொளத்துார்.