உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு /  புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

 புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

செ ங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் செல்லும் பேருந்துகள் நின்று செல்லும். இங்கு, புதுச்சேரி மார்க்கம் செல்லும் நிறுத்தத்தில், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை அருகில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம், கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. முறிந்து விழும் நிலையில் உள்ளதால், இந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ் கோபி, கூவத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !