புகார் பெட்டி: காந்தி – கிஷ்கிந்தா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
காந்தி – கிஷ்கிந்தா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மேற்கு தாம்பரத்தில், காந்தி – ராஜாஜி – காந்தி சாலைகள் சந்திப்பை, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. ஆனால், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை அகலமின்றி குறுகலாக இருப்பதால், தினமும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவசரகதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தாறுமாறாக ஓட்டி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாலையை அகலப்படுத்தி, நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். – சுந்தர், தாம்பரம்