மேலும் செய்திகள்
* பிரச்சனையும், தீர்வும்
06-Sep-2025
வடபழனி, ஆற்காடு சாலையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணியால் விபத்து நடப்பதை தவிர்க்க, இரும்பு தடுப்பு வைத்துள்ளதால், சாலையின் அளவு குறுகலாக உள்ளது. இந் நிலையில், வடபழனி அருணாசலம் சாலை முதல் வடபழனி பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் ஒரு புறம் கார்களும், மற்றொரு புறம் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலை மேலும் குறுகலாகி நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சாலையோர வாகன ஆக்கிரமிப்புகளை அகற்ற, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கவுதம், வடபழனி.
06-Sep-2025