இடையர்பாளையத்தில் சக்கடை வசதி தேவை
இடையர்பாளையம் காந்தி நகர், விவேகானந்தர் வீதியில் சக்கடை வசதி, தார் ரோடு, பாதாள சாக்கடை என எதுவும் இல்லை. மழை காலங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். – உமா மகேஷ்வரி, விவேகானந்தர் வீதி. 2. புவனேஷ்வரி நகரில் தண்ணீர் தேக்கம்
மாநகராட்சி 42 வார்டு, புவனேஷ்வரி நகர் முதல் இரண்டு வீதிகளை இனைக்கும் பாதையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சிறிது நேர மழைக்கே முழங்கால் வரை நீர் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். – அலகிரி பிரகாஷ், புவனேஷ்வரி நகர். 3. நல்லாம்பாளையத்தில் ரோடு சேதம்
நல்லாம்பாளையம், சிவன் கோயில் அருகில் ரோடு சேதமடைந்து சேரும், சகதியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் முன் சீரமைக்க வேண்டும். – சிவா, நல்லாம்பாளையம். 4. ஸ்ரீ முருகன் நகரில் ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ஜி.என்.மில்ஸ், ஸ்ரீ முருகன் நகரில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில், மழைநீர் தேங்குகிறது. குழிகள் இருப்பது தெரியமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். – பிரசன்ன, ஜி.என்.மில்ஸ். 5. பீளமேட்டில் தெருவிளக்கு இல்லை
பாரதி காலனி பிரதான ரோட்டில், தெருவிளக்கு ஒரு மாதமாக எரியவில்லை. இரவில், இருள் சூழ்ந்துள்ளதால், அவ்வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். – சுமதி, பீளமேடு. 6. வடவள்ளியில் நாய் தொல்லை
வடவள்ளி பெரியார் நகர் 2வது வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. விபத்து அபாயம் உள்ளது. –விஸ்வநாதன், வடவள்ளி. 7. கணபதியில் இருள்
கணபதி சங்கனுார் ரோடு செந்தில் நகர் 30வது வார்டில் உள்ள தெருவிளக்கு இரண்டு ஆண்டுகளாக எரியவில்லை. இதைப்பயன்படுத்தி இரவில் அங்கு சிலர் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். –ஈஸ்வரன், கணபதி. 8. டி.வி.எஸ்., நகரில் நீர் தேக்கம்
மாநகராட்சி 117 வார்டு, டி.வி.எஸ். நகரிலிருந்து கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. – கனேசன், டி.வி.எஸ்., நகர். 9. சூலுாரில் பழுதடைந்த மின்கம்பம்
போகம்பட்டி கிராமத்தில் பொன்னாங்கண்ணி பிரதான ரோட்டில், மின்கம்பம் மோசமான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும். – சிவா, போகம்பட்டி. 10. கணபதியிலும் அதே நிலை
கணபதி கே.கே. நகர், 10வது பிரதான ரோட்டில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். – தேவராஜ், கணபதி. 11. உப்பிலிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மரம்
உப்பிலிபாளையம், சீனிவாசா நகர், விநாயகர் கோயில் வீதியில், சீனிவாசப்பெருமாள் கோயில் அருகில் போக்குவரத்து நிறைந்த ரோட்டில் உள்ள மரம் கீழே விழும் நிலையில் உள்ளது. – நடராஜன், உப்பிலிபாளையம்.