| ADDED : செப் 11, 2026 08:56 AM
பாராக மாறி வரும் தொழிற்பேட்டை விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில் சமூக விரோதிகள் மது அருந்துவதால் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்துள்ளது. குமரன், விருத்தாசலம். சாலை அகலப்படுத்தப்படுமா? பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் - காரையூர் வரையிலான தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியசாமி, பெ.பூவனுார். நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுமா? பெண்ணாடம், வேலன் நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ், பெண்ணாடம்பாதாள சாக்கடை திட்டம் தேவை? பெண்ணாடம் பேரூராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், பெண்ணாடம். போக்குவரத்து நெரிசல் கடலுார் உழவர் சந்தை எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முருகன், கடலுார். பொதுமக்கள் அவதி கடலுார் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்துடன் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். பிரபாகர், கடலுார்.