புகார் பெட்டி
சாலைகள் மோசம்
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. -பிரபாகரன், வீரசோழபுரம். குப்பை பிரச்னை
சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் புறவழிச்சாலையை ஒட்டி கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுவதால் புகை மூட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். -சைமன், கனியாமூர். தண்ணீர் தேங்கும் சாலைகள்
கள்ளக்குறிச்சி, மோரப்பாதை பகுதி தெருக்களில் சாலை அமைக்கப்படாமல் பள்ளம், மேடாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. -சக்தி, மோரப்பாதை.