உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்

குழாய் உடைந்து சாலையில் தேங்கும் குடிநீர்

வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் சாலையில் கட்டவாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த குழாய் வாயிலாக செல்லும் குடிநீர், கிராமத்தினரின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், சில நாட்களாக நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் குடிநீர் சாலையில் தேங்கி உள்ளது.இதனால் குடிநீர் வீணாவதோடு அப்பகுதி சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, கட்டவாக்கம் பிரதான சாலையில் நிலத்தடியில் உடைந்த குழாயை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க. ஏழுமலை,தென்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ