மேலும் செய்திகள்
சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
07-Jun-2025
உத்திரமேரூர் - புக்கத்துறை நெடுஞ்சாலையில் சாலவாக்கம் கூட்டு சாலை உள்ளது. இங்குள்ள, சாலவாக்கம் செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகளை விலங்குகள் கிளறுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரத்தில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனமாக இருந்து வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை மாடுகள் உட்கொள்வதால் அஜீரன கோளாறு ஏற்பட்டு சிரமப்படுகின்றன. எனவே, சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - - ஆர். ராசு, சாலவாக்கம் கூட்டுச்சாலை.
07-Jun-2025