காஞ்சிபுரம்: புகார் பெட்டி; வடிகால்வாய் தளம் சீரமைக்கப்படுமா?
வடிகால்வாய் தளம் சீரமைக்கப்படுமா?
உத்திரமேரூர் - வந்தவாசி சாலை வழியாக வேடபாளையம், பங்களாமேடு, மானாம்பதி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம், மழைநீர் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பங்களாமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம் அடைந்து உள்ளது. கால்வாய் தளம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் செல்வோர், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.குமரேசன், மானாம்பதி.