மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் படர்ந்த கொடிகள் அகற்றப்படுமா
08-Jun-2025
படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில் இருந்து காஞ்சிவாக்கம் செல்லும் சாலையோரம், மின் கம்பங்களின் வழியாக மின் வழித்தடம் செல்கிறது. இந்த நிலையில், நாவலுார் அருகே உள்ள மின்கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பியை சூழ்ந்துள்ளன.இதனால், மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, மின் விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே, படப்பை மின் வாரிய அதிகாரிகள், மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.தட்சிணாமூர்த்தி, செரப்பனஞ்சேரி.
08-Jun-2025