ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும்
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து விட்டு செல்கின்றனர். இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைக்கோவிலில் வசிக்கும் குருக்கள், கடைக்காரர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திடீரென பணம் தேவைப்பட்டால், 3 கி.மீ., கீழே இறங்கி வந்து, ஏ.டி.எம்., மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் கோவில் குருக்கள் நலன் கருதி, மலைக்கோவில் வளாகத்தில், அரசு அல்லது தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க வேண்டும். – க.வெங்கடேசன், திருத்தணி.