உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் /  மழைநீர் தேக்கம்; சாலை காலி

 மழைநீர் தேக்கம்; சாலை காலி

குப்பை தேக்கம் கல்லாங்காடு கிழக்கு, கிருஷ்ணா நகர்-முத்து நகர் வழியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுகின்றன. - ராமலிங்கம், முத்து நகர். கால்வாய் அடைப்பு திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், பழைய சக்தி தியேட்டர் ரோடு, இந்திரா ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. - மகேந்திரன், பி.என். ரோடு. திறந்த கால்வாய் அவிநாசி, ராயம்பாளையம், திருப்பூர் ரோடு ரவுண்டானா எதிரில் கால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. - மதன்சுரேஷ், ராயம்பாளையம். வீணாகும் தண்ணீர் தெக்கலுார் உயர்நிலைப்பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும். - நந்தகுமார், தெக்கலுார். மூடப்படாத குழி பல்லடம்-திருப்பூர் ரோடு, அருள்புரம் பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் கேட்வால்வு பழுதாகி தண்ணீர் தேங்கியுள்ளது. பழுதை சரிசெய்ய குழி தோண்டிய நிலையில், Bags மூடாமல் விட்டுள்ளனர். - முத்துக்குமாரசாமி, அருள்புரம். கழிவுநீர் வழிகிறது திருப்பூர், காசிபாளையம் பஸ் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. - ரமேஷ், காசிபாளையம். பல்லாங்குழி சாலை 15 வேலம்பாளையம்-காவிலிபாளையம் ரோட்டில் மழைநீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும். - குழந்தைவேலு, 15 வேலம்பாளையம். எரியாத விளக்கு அங்கேரிபாளையம், சிங்காரவேலன் நகரில் இரு வாரங்களாக தெருவிளக்கு எரியவில்லை. பழுதான விளக்கை மாற்றி, புதிய விளக்கு பொருத்த வேண்டும். - சிவா, சிங்காரவேலன் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி