உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / ஜல்லி கொட்டி ஆறு மாதம்; பணி துவங்கவோ தாமதம்

ஜல்லி கொட்டி ஆறு மாதம்; பணி துவங்கவோ தாமதம்

வடிகால் இல்லைதிருப்பூர், 25வது வார்டு, காவிலிபாளையம் பிரிவு, அப்பல்லோ அகரம் சந்திப்பில், விரிவான மழைநீர் வடிகால் வசதி இல்லை. சாலையில் தண்ணீர் மாதக்கணக்கில் வழிந்தோடுகிறது.- செல்வராஜ், காவிலிபாளையம். (படம் உண்டு)கிளைக்குள் மின்கம்பிராயபுரம், ஒய்.டபிள்யூ.சி., ஹாஸ்டல் முன்புற வீதியில், மரக்கிளைகளுக்குள் மின்கம்பி செல்கிறது. மின்வாரியம் மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.- பிரவீன்குமார், ராயபுரம். (படம் உண்டு)படரும் செடிகள்பெருமாநல்லுார் ஊராட்சி, பனங்காடு, பொடாரம்பாளையம் ஏ.டி., காலனி, ஸ்ரீ காணியாள அய்யன் கோவில் அருகே மின்கம்பத்தில் செடிகள் படர துவங்கியுள்ளது. அகற்ற வேண்டும்.- குட்டிகுமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)நாய்த்தொல்லைதிருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.-- கவுதம், மாஸ்கோ நகர். (படம் உண்டு)துவங்காத பணிதிருமுருகன்பூண்டி, கூட்டுறவு நகரில் ரோடு போட பூமி பூஜை போட்டு ஆறு மாதமாகிறது. பணி இன்னமும் துவங்கவில்லை. ரோடு ஜல்லிக்கற்கள் நிறைந்து காணப்படுகிறது.- விஜி, லட்சுமி நகர். (படம் உண்டு)கண்காணிப்பு அவசியம்திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு பாதுகாவலர் நியமிக்க வேண்டும். பகலில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கின்றன. போலீசார் கண்காணிக்க வேண்டும்.- ரத்தினசாமி, மேட்டுப்பாளையம். (படம் உண்டு)குப்பை தேக்கம்தென்னம்பாளையம், முத்தணம்பாளையம் பாலத்தின் மேல் குப்பை தேங்குகிறது. குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.- ஜோதிகுமார், தென்னம்பாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டனில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- அமுதா, வி.ஜி.வி., கார்டன். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைதிருப்பூர், லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி சந்திப்பில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- விஜயலட்சுமி, லட்சுமி நகர். (படம் உண்டு)திருமுருகன்பூண்டி - பெரியாயிபாளையம் ரோடு, வி.ஏ.ஓ., ஆபீஸ் வீதி சாலை குழாய் பதிக்க தோண்டியதால், குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ரோடு அமைக்க வேண்டும்.- சுப்ரமணியம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்இடையூறு அகற்றம்திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் ரவுண்டானா சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் போட்டு வைக்கப்பட்டிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், அகற்றப்பட்டு விட்டது.- குகன், ஆண்டிபாளையம். (படம் உண்டு)குழி மூடல்திருப்பூர், காட்டன் மில் ரோடு, பாரதி நகர் மேற்கு, சக்தி மருத்துவமனை செல்லும் வழியில் நடுரோட்டில் குழி இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், குழி மூடப்பட்டுள்ளது.- ரஞ்சித், பாரதிநகர். (படம் உண்டு)உடைப்பு சீரானதுதிருப்பூர், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பு சீர்செய்யப்பட்டுள்ளது.- குழந்தைவேலு, மங்கலம் ரோடு. (படம் உண்டு)கழிவு அகற்றம்திருப்பூர், அவிநாசி ரோடு, ஆஷர் மில் ஸ்டாப் பின்புற வீதியில் கால்வாய் சுத்தம் செய்து, கழிவு அள்ளாமல் அப்படியே இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, கழிவு அள்ளப்பட்டு விட்டது.- ரிஷி, பத்மாவதிபுரம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி