உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சாலை தடுப்பில் பஸ் மோதி ஓட்டுநர் உட்பட 8 பேர் காயம்

சாலை தடுப்பில் பஸ் மோதி ஓட்டுநர் உட்பட 8 பேர் காயம்

வானகரம், தர்மபுரியில் இருந்து கோயம்பேடு நோக்கி, நேற்று முன்தினம் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் முனுசாமி, 47, இயக்கினார். அந்த பேருந்தில், நடத்துநர் அன்பழகன் உட்பட 30 பயணியர் இருந்தனர்.நேற்று அதிகாலை, மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பேருந்தின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஓட்டுநர் உட்பட, பேருந்தில் பயணம் செய்த எட்டு பயணியர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, அருகில் இருந்தோர் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் சிக்கிய பேருந்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வந்த பயணியர், வேறு பேருந்து வாயிலாக கோயம்பேட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ