உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் குழந்தை சர்ச்சில் மீட்பு

பெண் குழந்தை சர்ச்சில் மீட்பு

சென்னை :எழும்பூர், பந்தியோன் சாலையில் உள்ள இருதய ஆண்டவர் சர்ச் வளாகத்தில், பிறந்து 15 நாட்களான பெண் குழந்தை ஒன்று, கைவிடப்பட்ட நிலையில் கடந்த 9ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், போலீசில் புகார் அளித்தனர். தற்போது, குழந்தை பாதுகாப்பு இல்லத்தில் அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர், 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளாதபட்சத்தில், குழந்தை தத்து வளர்ப்பு சட்டத்தில் தகுதிப்படுத்தப்படும்.விபரங்களுக்கு, சூளை, சாமி பிள்ளை தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரடியாகவோ, 98430 39085 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ