உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / புகார் தந்த இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்த போலீஸ்

புகார் தந்த இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்த போலீஸ்

ஆவடி,பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமரன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆவடி போலீசில் ஒரு புகார் அளித்தார்.அதன் விபரம்:என் கணவரின் இருசக்கர வாகனம், கடந்த 13ம் தேதி இரவு, ஆவடியில் மதுக்கூடம் அருகே திருடு போனது. இது குறித்து ஆவடி குற்றப்பிரிவில் நான் புகார் அளித்தேன்.போலீசார், கணவரின் வாகனத்தை, பட்டாபிராம், காந்தி நகர் அருகே கண்டுபிடித்து, என்னிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸ், 30, என்பவர், என் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.அப்போது, 'நீ அழகாக இருக்கிறாய், ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள விடுதிக்கு தனியாக வா' என அழைத்தார்.என் அண்ணன் உதவியுடன், அங்கு சென்று காவலர் ஹரிதாசை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கு பதிந்த ஆவடி போலீசார், காவலர் ஹரிதாசை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ