புதிய அங்கன்வாடி மையம் செய்யூரில் அமைக்க கோரிக்கை
செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமேடு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.அங்கன்வாடி மையத்தில் 12 குழந்தைகள் படிக்கின்றனர்.மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவால் பயனடைந்து வருகின்றனர்.அங்கன்வாடி மைய கட்டடம் , 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் நாளடைவில் பழுதடைந்தது. சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி மையம், தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு தற்போது செயல்படுகிறது.தனியார் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து குழந்தைகளின் நலன் கருதி, புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்கின்றனர்.