விபத்துக்கு வழிவகுக்கும் ரோட்டோர மணல் குவியல்
தி ண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோட்டோரங்களில் மணல் குவியல் நிறைந்து காணப்படுகிறது. வாகனங்களில் வருவோர் பாதிக்கும் நிலையில் டூவீலர்களில் வருவோர்தான் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். ரோட்டோரம் செல்லும் இவர்கள் மணல்குவியலில் சிக்கி தவறி விழுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதை அவ்வப்போது கண்காணித்து மணல் குவியலை அகற்றவேண்டிய நெடுஞ்சாலை துறையினர் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். மணல் குவியலை உடனுக்குடன் அகற்ற இனியாவது துறையினர் முன் வர வேண்டும்.