மேலும் செய்திகள்
சனி பகவானுக்கு சிறப்பு பூஜை
26-Apr-2026
மல்லசமுத்திரம்:சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. வைகாசி வளர்பிறை சஷ்டியையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல், மாலை வரை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.தொடர்ந்து தங்க கவசத்தில் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முரு கன், வள்ளி, தெய்வானையுடன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முன்னதாக, லட்சுமணசாமி சமாதி, வழிவிடு கணபதி, வேலாயுத சுவாமி, இடும்பன், இரட்டை விநாயகர், வன்னிமரத்து விநாயகர், சனி பகவான், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
26-Apr-2026