தகவல் சுரங்கம்
தேசிய மாம்பழ தினம்
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். இந்தியாவில் 5000 ஆண்டுக்கு முன் பயிரிடப்பட்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல வகைகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் இருந்து மாம்பழம், உலகிற்கு பரவியது. இந்தியா உட்பட சில நாடுகளில் இது பழம் மட்டுமல்ல. கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, டி சத்துகள் உள்ளன. இதன் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 22ல் தேசிய மாம்பழ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை ஜூஸ், கேக், ஐஸ்கிரீம் என பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.