உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

இலக்கியத்தின் உயரியவிருதுதேசிய அளவில் இலக்கிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும்உயரியவிருது ஞாபீட விருது. 1965-ல் தொடங்கப்பட்டது. 65 பேர் பெற்றுள்ளனர். மொழி வாரியாக அதிகமாக ஹிந்தி 12,கன்னடம்8, வங்காளம் , மலையாளம் தலா 6 முறை வழங்கப்பட்டது.முதல் விருதாக கேரள எழுத்தாளர் சங்கர குரூப் (ஓடக்குழல், 965) பெற்றார். தமிழ் மொழிசார்பில் முதன்முறையாக எழுத்தாளர் அகிலன் (சித்திரப்பாவை 1975)பெற்றார். இவ்விருதை (1976) வென்ற முதல் முதல்பெண் எழுத்தாளர் மேற்குவங்கத்தின் ஆஷாபூர்ணா தேவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 22, 2025 06:52

எழுத்தாளர் அகிலன் எழுதிய கதையான சித்திரப்பாவை, 1960 லியே தெய்வப்பிறவி என்ற பெயரில் திரைப்படமாக வந்துவிட்டது. அதில் சிவாஜி கணேசன், பத்மினி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் ஆரம்பிக்கு முன் தலைப்புகள் Titles போடும்போது சாஹித்திய அகாடமி பரிசு பெற்ற அகிலனின் கதையான சித்திரப்பவை என்று பார்த்ததாக எனக்கு நினைவு. ஆனால், இங்கே அந்த விருது 1975 ல் பெற்றார் என்று உள்ளது. ஆனால் வலைத்தளங்களில், அகிலன் அவர்கள் வேங்கையின் மைந்தன் என்ற சரித்திர நாவலுக்கு 1963ல் சாஹித்திய அகாடமி விருது வாங்கினார் என்று உள்ளது. Akilan Vengaiyin Maindhan historic novel


சமீபத்திய செய்தி