தகவல் சுரங்கம்: நீண்டகால அரியணை
தகவல் சுரங்கம்நீண்டகால அரியணைஉலகில் இன்றும் சில நாடுகளில் மன்னர்கள் உள்ளனர். இந்நிலையில் உலகில் நீண்டகாலம் மன்னராக இருந்தவர் பிரான்சின் 14ம் லுாயிஸ். இவர் 1643ல் தன் ஐந்து வயதில் மன்னரானார். அன்றிலிருந்து 1715ல் மறையும் வரை 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரியணையில் இருந்தார். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளார். இவர் 70 ஆண்டு, 214 நாள் அரியணையில் இருந்தார். மூன்றாவது இடத்தில் உள்ள தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ், 70 ஆண்டு 126 நாட்கள் பதவி வகித்தார்.