தகவல் சுரங்கம் : உலக அகதிகள் தினம்
தகவல் சுரங்கம்உலக அகதிகள் தினம்உலகில் 2024 மே கணக்கின்படி, 12 கோடி பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். இதில் 4.40 கோடி அகதிகள் என ஐ.நா., தெரிவிக்கிறது. அகதிகள் எண்ணிக்கையில் வெனிசுலா, சிரியா, ஆப்கன், உக்ரைன், தெற்கு சூடான் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. போர், பயங்கரவாதம், வறுமை உட்பட பல சூழல்களில் மக்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அகதிகளாக உருவாக்கப்படுகின்றனர். அகதிகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அகதிகளுடன் ஒற்றுமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.