உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலகை சுற்றிய பெண்

தகவல் சுரங்கம் : உலகை சுற்றிய பெண்

தகவல் சுரங்கம்உலகை சுற்றிய பெண்விமானத்தில் தனியாக உலகை சுற்றிய முதல் பெண் என்ற சாதனை படைத்தவர் அமெரிக்க விமானி ஜெர்ரி மாக். 1925ல் ஒஹியோ நகரில் பிறந்தார். இவர் தன் 39 வயதில் 1964 மார்ச் 19ல் 'செஸ்னா' என்ற ஒற்றை இன்ஜின் விமானத்தில் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் உலகை சுற்றும் பயணத்தை தொடங்கினார். மெராக்கோ, சவுதி, வியட்நாம் வழியாக உலகை சுற்றி வந்து 1964 ஏப். 17ல் நிறைவு செய்தார். இவரது பயண காலம் 29 நாட்கள், 12 மணி நேரம். பயணத்தின் போது 21 இடங்களில் நிறுத்தினார். மொத்தம் 36,790 கி.மீ., துாரம் பயணம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி