தகவல் சுரங்கம் : சிகரத்தில் சாதனை
தகவல் சுரங்கம்சிகரத்தில் சாதனைஉலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் (29,031 அடி). இதில் அதிகமுறை (31) ஏறி உலக சாதனை படைத்தவர் நேபாளத்தின் காமி ரீட்டா. 1970ல் பிறந்த இவர் ஷெர்பா இனத்தை சேர்ந்தவர். 55 வயதில் சமீபத்தில் 31வது முறையாக எவரெஸ்டில் ஏறி தன் சொந்த சாதனையை முறியடித்தார். 1994ல் தன் 24 வயதில் முதன்முறை எவரெஸ்டில் ஏறினார். 2018ல் உலகில் அதிகமுறை (22) எவரெஸ்டில் ஏறியவர் என்ற சாதனை படைத்தார். அப்போது இவர், 'ஓய்வுபெறுவதற்கு முன் 25 முறை ஏறுவதற்கு திட்டமிட்டுள்ளேன்' என்றார். ஆனால் 31 முறை என்ற சாதனையை படைத்துள்ளார்.