தகவல் சுரங்கம்:நீளமான தேசியகீதம்
நாட்டுப்பற்றை வளர்ப்பதில் தேசிய கீதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அந்தந்த நாடுகளின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை குறிப்பிடும் விதமாக இருக்கும். இசையுடன் சேர்த்து பாடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் அடிப்படையில் உலகின் பெரியது உருகுவே நாட்டின் தேசிய கீதம். இதை முழுவதும் பாடி முடிக்க 6 நிமிடம் ஆகும். கிரீஸ் நாட்டின் தேசிய கீதம், 158 பத்திகளை கொண்டது. 1823ல் இயற்றப்பட்டது. இதை முழுவதும் பாடி முடிக்க 55 நிமிடம் ஆகும். ஆனால் முதல் இரண்டு பத்தியை மட்டும் தேசிய கீதமாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துகிறது.