மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : துணை ஜனாதிபதி தேர்தல் எப்படி
16-Aug-2025
தகவல் சுரங்கம் அதிகம்... குறைவு... இதுவரை 15 பேர் துணை ஜனாதிபதியாகினர். இதில் 5 பேர் கட்சி சாராதவர். காங்., சார்பில் 5, பா.ஜ., சார்பில் 4,ஜனதா தளம் சார்பில் ஒருவர் அடங்குவர். துணை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக ஓட்டு (699)வித்தியாசத்தில் வென்றவர் கே.ஆர்.நாராயணன். 1992 தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டார். எதிர்த்துபோட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஜோகிந்தர் சிங் ஒரு ஓட்டு மட்டும் பெற்றார். குறைந்த வித்தியாசத்தில் (149) வென்றவர் பைரோன் சிங் ஷெகாவத். 2002ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவருக்கு 454 ஓட்டு கிடைத்தது. காங்கிரசின் சுஷில்குமார் ஷிண்டே 305 ஓட்டு பெற்றார்.
16-Aug-2025